இஸ்ரேலின் மிகப்பெருமை வாய்ந்த டான் டேவிட் பரிசினை இந்த வருடம் மிகப் புகழ்பெற்ற இந்திய வரலாற்று ஆசிரியரான சஞ்சய் சுப்ரமணியம் வென்றிருக்கின்றார்.
இந்த விருது, முந்தைய நவீன யுகத்தில் ஆசியர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் வடக்கு தெற்கு அமெரிக்க மக்கள் ஆகியோரிடையே ஏற்பட்ட கலாச்சார மோதல்களின் மீதான அவரது படைப்புக்காக அளிக்கப்பட்டது.
அவர் பெரு வரலாற்றில் “கடந்த கால பரிமாணம்” என்னும் பிரிவில் தனது படைப்பிற்காக இவ்விருதை வென்றுள்ளார்.
அவர் இப்பிரிவில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை சிகாகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கென்னத் போமிரான்ஸ் என்பவருடன் பகிர்ந்து கொள்கிறார்.
சர்வதேச டான் டேவிட் பரிசு
டான் டேவிட் பரிசு என்பது டெல் அவிவ் பல்கலைக்கழகத்தைத் தலைமையகமாகக் கொண்ட டான் டேவிட் நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்ட ஒரு கூட்டு சர்வதேச முயற்சி ஆகும்.
இப்பரிசு ஒவ்வொரு வருடமும் மனிதனின் கடந்த, நிகழ்கால மற்றும் எதிர்காலத்திய சாதனைகளைக் குறிப்பிடும் துறைகளில் அவர்கள் மேற்கொண்ட உன்னதமான அறிவியல்பூர்வ, தொழில்நுட்ப மற்றும் மனிதாபிமான சாதனைகளுக்காக வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் மூன்று டான் டேவிட் பரிசுகள் வழங்கப்படுகின்றன.