TNPSC Thervupettagam

டாமரிஸ்க் நடவடிக்கை

December 2 , 2024 21 days 92 0
  • இது பனிப் போர் காலத்திய ஒரு நடவடிக்கை ஆகும்.
  • இந்த டாமரிஸ்க் நடவடிக்கையானது, அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு, மற்றும் பிரான்சு  ஆகிய நாடுகளைச் சேர்ந்த முகமைகளை உள்ளடக்கியது.
  • இதானால் கிழக்கு ஜெர்மனியில் நிலை நிறுத்தப்பட்டிருந்த சோவியத் நாடுகளின் படைப் பிரிவுகள் விட்டுச் சென்ற குப்பைகளிலிருந்து பல சான்றுகள் கிடைத்தன.
  • அப்புறப்படுத்தப்பட்ட இந்தப் பொருட்களில் உணவுக் கழிவுகள், கடிதங்கள், இராணுவ ஆவணங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட கழிப்பறை காகிதங்களும் அடங்கும்.
  • உளவு முகமைகள் ஆனது, இந்தக் குப்பைக் குவியல்களுக்கு இடையே முக்கியமான சில தகவல்களைக் கண்டறிந்தன.
  • சில சூழல்களில், அந்த முகமைகள் மருத்துவமனை கழிவுத் தொட்டிகளில் இருந்து சில பொருட்களை மீட்டெடுத்தனர், அதில் கிடைத்த மனித உறுப்புகள் குறித்த விவரங்கள், குறிப்பாக ஆப்கானிஸ்தானில் போரில் பயன்படுத்தப்பட்ட தெறி குண்டுகள் மற்றும் சோவியத் வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் பற்றிய தகவல்களை வழங்கியது.
  • 1948 ஆம் ஆண்டில், அமெரிக்க விமானி கெயில் ஹால்வோர்சன் பெர்லின் வான்வழி பொருள் விநியோக நடவடிக்கையின் போது, குழந்தைகளுக்காகப் பெர்லினில் இருந்து மிட்டாய்களை இறக்கியதையடுத்து, "தி கேண்டி பாம்பர்" என்ற புனைப் பெயரைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்