பெங்களூரு (6வது) மற்றும் புனே (7வது) ஆகிய இரண்டு இந்திய நகரங்கள், 2023 ஆம் ஆண்டு உலகளவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பத்து நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரமாக இலண்டன் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
2023 ஆம் ஆண்டில் சிலிக்கான் நகரத்தில் (பெங்களூர் நகரம்) பயணம் செய்வதற்கு 'மிக மோசமான நாள்' ஆக செப்டம்பர் 27 ஆம் தேதி (புதன்கிழமை) குறிப்பிடப் பட்டது.
இதில் டெல்லி 44வது இடத்தையும், மும்பை 52வது இடத்தையும் பெற்றன.