TNPSC Thervupettagam

டார்வின் பறவையினங்கள்

October 21 , 2024 33 days 106 0
  • கேலபோகஸ் தீவுகளில் ஏற்படும் ஆறு தொடர்ச்சியான வறட்சிகள் ஒரு புதிய வகை பறவையினங்கள் தோன்றுவதற்கு வழி வகுக்கும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
  • இந்தத் தீவிர நிகழ்வுகளால் பறவைகளில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் சில புதிய பறவை இனங்கள் உருவாவதற்கான "பாதையை வழங்குகிறது".
  • ஈக்வடார் (நில நடுக்கோட்டு) நாட்டு மாகாணமான கேலபோகஸ், ஒட்டு மொத்தமாக டார்வின்ஸ் ஃபிஞ்சுகள் என்று அழைக்கப்படுகின்ற அதன் பலதரப்பட்டப் பறவை இனங்களுக்குப் புகழ்பெற்றது.
  • பிரிட்டிஷ் இயற்கை ஆர்வலர் சார்லஸ் டார்வினுக்கு இயற்கைத் தேர்வின் விளைவான பரிணாமத்தைப் புரிந்து கொள்ள உதவுவதில் இவற்றின் பங்கின் காரணமாக இவை இப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன.
  • டார்வின்ஸ் ஃபிஞ்சுகள், தோராயமாக 18 வெவ்வேறு பாசரைன் பறவை இனங்களை உள்ளடக்கிய ஒரு குழுவாகும்.
  • அவை அவற்றின் அலகுகளின் அளவு மற்றும் செயல்பாடு ஆகியவற்றில் உள்ள சில குறிப்பிடத் தக்க மாறுபாட்டிற்காக தனித்துவமாகக் குறிப்பிடப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்