உலகப் பண இருப்பில் டாலரின் பங்கானது கடந்த 20 ஆண்டுகளாக ஒரு நிலையான சரிவைக் கண்டுள்ளது.
மத்திய வங்கிகள் தங்களது பங்குகளைப் பன்முகப்படுத்த ரென்மின்பி உள்ளிட்ட மரபு சாரா பணங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதே இதற்குக் காரணமாகும்.
இருப்பு மேலாண்மை நிறுவனங்கள் டாலருக்குப் பதிலாக இருவேறு திசைகளில் ஒரு கால்பகுதியினை ரென்மின்பியை நோக்கியும் மற்ற 3 கால்பகுதிகளை சிறு நாடுகளின் பணங்களை நோக்கியும் நகர்த்தும் வகையில் திரும்பியுள்ளன.
டாலர் ஆதிக்கத்தின் மறைமுகமானச் சரிவு : செயல்பாட்டிலுள்ள பன்முகப்படுத்தல் அமைப்புகள் மற்றும் மரபுசாரா இருப்பு பணங்களின் எழுச்சி என்று தலைப்பிடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் புதிய ஆய்வறிக்கையில் இத்தகவலானது தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையினைச் சர்வதேச நாணய நிதியத்தின் சேர்கான் அர்சலான்சல்ப், கலிபோர்னியாவின் பெர்க்கிலி பல்கலைக்கழகத்தின் பேரி எய்சென்கிரீன் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் சிமா சிம்சன் ஆகியோர் இணைந்துத் தயாரித்து உள்ளனர்.