ஆராய்ச்சியாளர்கள் மீன்கள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களைத் தாக்கும் மில்லி மீட்டர் அளவிலான நான்கு புதிய வகை ஓடுகலிக் கொண்டுள்ள கணுக்காலி வகை ஒட்டுண்ணிகளையும், அதன் இரண்டு புதிய வகைகளையும் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஒட்டுண்ணி கோப்பாட் டால்ஃபஸின் ஸ்டார்கேஸர் இனத்தைச் சார்ந்து (யுரேனோஸ்கோபஸ் குட்டாடஸ்) வாழ்வதாகக் கண்டறியப்பட்டதால், இந்தப் புதிய குடும்பத்திற்கு யுரேனோஸ்கோபிகோலைடே என்று ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டு உள்ளனர்.
இது தென்மேற்கு இந்தியக் கடற்கரையில் 300-550 மீட்டர் ஆழத்தில் வாழும் மீன் இனமாகும்.
இந்தியாவில் ஒரு புதிய ஓடுடைய கணுக்காலி குடும்பத்தின் முதல் கண்டுபிடிப்பும், அதன் தரவு விவரிப்பும் இதுவாகும்.
யுரேனோஸ்கோபிகோலைடே என்ற புதிய குடும்பத்தின் கண்டுபிடிப்பு ஆனது, அதன் கீழ் ஹிரோடே ஓஹ்ஸ்டுகாய் என்ற புதிய பேரினம் மற்றும் இனங்களை உருவாக்க வழிவகுத்தது.
இந்தக் குழுவானது க்ளிப்டோதோவா சாகாரா என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய இனம் மற்றும் இணைக்கால்கள் கொண்ட இனத்தையும் கண்டறிந்துள்ளது.
எல்துசா அக்வாபியோ எனப் பெயரிடப்பட்ட மற்றொரு புதிய இணைக்கால்கள் கொண்ட ஓடுடைய கணுக்காலி வகை ஒட்டுண்ணி இனமும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நான்காவது புதிய இனம் ஆனது 11-12 மி.மீ அளவிலான “சதையில் ஊடுருவும் ஒட்டுண்ணி வகையான துடுப்புக் காலிகள் ஆகும்.