TNPSC Thervupettagam

டிஎன்ஏ தொழில்நுட்பம் (பயன்பாடு மற்றும் உபயோகம்) ஒழுங்குமுறை மசோதா 2019

July 28 , 2023 361 days 185 0
  • 2019 ஆம் ஆண்டு DNA தொழில்நுட்பம் (பயன்பாடு மற்றும் உபயோகம்) ஒழுங்குமுறை மசோதாவினை அரசாங்கம் மக்களவையில் இருந்து திரும்பப் பெற்றது.
  • இந்த மசோதாவானது, 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மக்களவையில் அறிமுகப் படுத்தப் பட்டது.
  • பின்னர் அது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.
  • இந்த மசோதாவானது, மூன்று முதன்மை நோக்கங்களைக் கொண்டிருந்தது.
  • முதலாவது, டிஎன்ஏ விவரக் குறிப்பு வாரியத்தினை இதற்கான ஒரு ஒழுங்குமுறை அமைப்பாக நிர்ணயிப்பதற்கு முற்பட்டது.
  • டிஎன்ஏ தரவு வங்கிகள் எனப்படுகின்ற, குற்றவாளிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடமிருந்துச் சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ தகவல்களைச் சேமித்து வைப்பதற்கான தரவுத் தளங்களை உருவாக்கவும் இந்த மசோதா முற்பட்டது.
  • இந்தத் தரவுத்தளமானது, குற்றம் நடந்த இடங்களிலிருந்து பெறப்பட்ட பொருத்தமிக்க மாதிரிகளைத் தரவரிசைப் படுத்தித் தேட உதவும் வகையில் அமைக்கப்பட இருந்தது.
  • மூன்றாவதாக, குற்றவாளிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகளைச் சேகரிப்பதை எளிதாக்க முற்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்