TNPSC Thervupettagam

டிஜிட்டல் இணையமேடை மீதான சிறந்த கார்பரேட் சொசைட்டி

May 7 , 2018 2395 days 759 0
  • 2018-ஆம் ஆண்டிற்கான வங்கியியல், நிதியியல் சேவைகளுக்கான, மற்றும் காப்பீட்டு தலைமைத்துவ விருதுகளில் {Banking, Financial services and Insurance (BFSI) leadership Awards 2018} டிஜிட்டல் இணையமேடை மீதான சிறந்த கூட்டுறவுச் சங்க விருதினை (Best Co-operative Society on digital platform) ஆதர்ஷ் கிரெடிட் நிறுவனம் (Adarsh Credit) வென்றுள்ளது.
  • தன்னுடைய உறுப்பினர்களுக்குக் காகிதப் புழக்கமற்ற நிதியியல் சேவைகளை (paperless financial services) வழங்குவதற்காக மின் – கையெழுத்து (e-sign) வசதியை ஆதர்ஷ் கிரெடிட் நிறுவனம் செயல்படுத்தியுள்ளது.
  • இத்தொடக்கமானது டிஜிட்டல் மயமாக்கலை மேலும் ஊக்குவிக்கும். மேலும் இது ரொக்கமல்லாத பொருளாதாரத்தை (cashless economy) நோக்கிய ஓர் முக்கிய அடியாகும்.
  • மேலும் ஆதர்ஷ் கிரெடிட் நிறுவனமானது டிஜிட்டல் முறையில் நிதியியல் சேவைகளை மேற்கொள்ளும் இந்தியாவின் முதல் கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கமாகும் (credit co-operative society).
  • மேலும் இந்த 2018-ஆம் ஆண்டிற்கான BFSI தலைமைத்துவ விருதுகளை மேக்ஸ் குப்தா சுகாதார காப்பீட்டு நிறுவனம், VMware, SREI மற்றும் தேசிய தகவல் மையம் (National Informatics Center) ஆகிய புகழ்பெற்ற நிறுவனங்களும் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்