TNPSC Thervupettagam

டிஜிட்டல் இந்தியா நம்பகத்தன்மை சரிபார்ப்பு முகமை

April 11 , 2024 226 days 265 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) இணைய வெளிக் குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில் எண்ணிம இந்தியா நம்பகத்தன்மைச்  சரிபார்ப்பு முகமை  (DIGITA) எனப் படும் ஒரு புதிய செயற்கருவியைப் பரிசீலித்து வருகிறது.
  • முன்மொழியப்பட்டுள்ள இந்த முகமையானது, முறையானவற்றைச் சரிபார்த்து, பொதுப் பதிவேட்டை உருவாக்குவதன் மூலம் சட்டவிரோதக் கடன் செயலிகளின் அதிகரிப்பை குறைப்பதை இலக்காகக் கொள்ளும்.
  • எண்ணிம கடன் செயலிகளைச் சரிபார்ப்பதற்கான ஒரு முக்கிய மையமாக DIGITA செயல்படும்.
  • இந்த சரிபார்ப்பு செயல்முறையானது அந்தச் செயலிகள் பல்வேறு விதிமுறைகளுக்கு இணங்குவதையும் நெறிமுறைப் படி செயல்படுவதையும் உறுதி செய்யும்.
  • சரிபார்க்கப்பட்டச் செயலிகள் மட்டுமே "DIGITA-அங்கீகரிக்கப்பட்டவை" என்ற இந்த முத்திரையைப் பெறும் என்பதால் இதன் மூலம் பயனாளிகள் - கடன் வாங்குபவர்கள் - எளிதாக அவற்றை அடையாளம் காண முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்