இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் டிஜிட்டல் இந்தியா பயிற்சியளிப்பு திட்டதளத்தை தொடங்கியுள்ளது.
இந்தத் தளம் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு. இரவி சங்கர் பிரசாத் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
மாணவர்கள், ஆன்லைன் மூலமாக பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான வசதியை இத்தளம் ஏற்படுத்தித் தரும். இந்தப் பயிற்சியில் மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.10,000 ஊதியத் தொகையாக வழங்கப்படும்.