2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதியன்று உலக சுகாதார நிறுவனமானது நாடுகள் டிஜிட்டல் சுகாதாரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான 10 வழிகள் மீது புதிய பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.
மக்களின் சுகாதார மற்றும் அத்தியாவசியச் சேவைகளை மேம்படுத்திட கைபேசிகள், வரைப்பட்டிகைகள் மற்றும் கணினிகள் வழியாக சுகாதாரச் சேவைகளை அணுகச் செய்திட இது எண்ணுகின்றது.
இந்த வழிகாட்டுதல்கள் விளிம்பு நிலை மக்களைச் சென்றடைவதின் முக்கியத்துவத்தையும் டிஜிட்டல் சுகாதாரம் எந்த வகையிலும் அவர்களைப் பாதிக்காது என்பதை உறுதி செய்திடுவதையும் வலியுறுத்துகின்றன.