TNPSC Thervupettagam

டிஜிட்டல் தாக்கம்

May 17 , 2019 1891 days 627 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான செயல்முறைகளை எடுத்துக் காட்டும் வகையில் “இந்தியாவின் பண வழங்கீடுகள் மற்றும் தீர்வு அமைப்புகளுக்கான” தனது தொலைநோக்கு ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
  • இந்தத் தொலைநோக்கு ஆவணத்தின் முக்கியக் கருத்துருவானது, “விதிவிலக்கான மின்னணு பணவழங்கீடுகள் அனுபவத்தை மேம்படுத்துதல்” என்பதாகும்.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது பணத்தை அதிகம் பயன்படுத்தாமல் டிஜிட்டல் முறையை அதிகம் பயன்படுத்தும் ஒரு சமூக நிலையை அடைவதற்குத் திட்டமிட்டுள்ளது.
  • இது தொலைநோக்குப் பார்வைக் காலத்தில் யுபிஐ/ஐஎம்பிஎஸ் போன்ற பணவழங்கீடுகள் அமைப்புகளில் சராசரி வருடாந்திர வளர்ச்சி 100 சதவிகிதம் அடைவதையும் NEFT மூலம் 40 சதவிகிதம் பணப் பரிமாற்றம் நிகழ்வதையும் எதிர்பார்க்கின்றது.
  • இது 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் 2,069 கோடி டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களானது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 8,707 கோடியாக அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.
  • பணவழங்கீட்டு அமைப்புகள் தொலைநோக்குப் பார்வை – 2021 ஆனது ஒரு குறிப்பிட்ட செயல் திட்டங்களையும் 12 குறிப்பிட்ட தீர்வுகளையும் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்