ரூபே மற்றும் பீம் தளங்கள் மூலம் வர்த்தகர் – நுகர்வோர் ஆகியோர் பரிமாற்றம் செய்வதன் மூலம் செலுத்திய சரக்கு மற்றும் சேவை வரியில் 20 சதவீதம் மீளப்பெறல் முறையில் நுகர்வோருக்கு திருப்பி அளிக்கப்படும். இச்சலுகை சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்படவுள்ளது. இம்முடிவு சமீபத்தில் நடைபெற்ற சரக்கு மற்றும் சேவை வரி (GST – Goods and Services Tax) ஆணையக் குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
பணம் மீளப்பெறல் சலுகையானது ஒவ்வொரு பரிமாற்றத்தின் போதும் ரூ.100 வரையிலான தொகையை நுகர்வோருக்கு திருப்பி அளிப்பதாகும்.
டிஜிட்டல் சலுகை அளிக்கும் இப்புதிய சோதனைத் திட்டத்தில் உத்திரப் பிரதேசம், பிகார், மஹாராஷ்டிரம், குஜராத், தமிழ்நாடு மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.