இந்திய ரிசர்வ் வங்கி இந்தக் குறியீட்டை வெளியிட்டுள்ளது.
RBI ஆனது 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து அரையாண்டு அடிப்படையில் டிஜிட்டல் பணவழங்கீட்டுக் குறியீட்டை வெளியிட உள்ளது.
இது இந்தியாவில் நேரடிப் பணமற்ற பரிமாற்றங்களின் வளர்ச்சியை அளவிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதற்கான அடிப்படை ஆண்டு 2018 ஆம் ஆண்டின் மார்ச் மாதமாகும்.
இந்தக் குறியீடானது கட்டண செலுத்துநர்கள், கட்டண (பணவழங்கீட்டு) செயல்பாடு, பணவழங்கீட்டுக் கட்டமைப்பு, தேவைசார் கூறுகள் மற்றும் விநியோகக் கூறுகள் & நுகர்வோரை மையமாகக் கொள்தல் என 5 மிகப்பெரிய கூறுகளைக் கொண்டுள்ளது.