டிஜிட்டல் மாற்றத்திற்கான மிக சாதகமான சூழ்நிலை - பெங்களூரு
November 10 , 2017 2600 days 902 0
பொருளாதார நுண்ணறிவுப் பிரிவு (Economist Intelligence Unit) என்ற அமைப்பின் அறிக்கையின் படி, உலக பொருளாதார மையங்களான சான்பிரான்சிஸ்கோ, லண்டன், சிங்கப்பூர் மற்றும் பெய்ஜிங் போன்ற நகரங்களை பின்னுக்குத் தள்ளி உலக நகரங்களின் வரிசையில் பெங்களூரு முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்த ஆய்வு, டிஜிட்டல் மாற்றத்திற்கு மிக சாதகமான சூழ்நிலையைக் கொண்ட நகரங்களை பட்டியலிடுவதற்கு மேற்கொள்ளப்பட்டதாகும்.
ஒட்டு மொத்த சூழ்நிலை, புதுமை மற்றும் தொழில் முனைவோர் திறன், நிதிநிலையின் சூழ்நிலை, மக்கள் மற்றும் அவர்களின் திறன், புதிய தொழில் நுட்பத்திற்கான வளர்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கட்டமைப்பு ஆகிய காரணிகள் இந்த தரவரிசைக்கு பயன்படுத்தப்பட்டன.
உலகப் புகழ்பெற்ற சிலிகான் பள்ளத்தாக்கை கொண்ட சான்பிரான்சிஸ்கோ இரண்டாவது இடத்திலும், மும்பை மற்றும் பெங்களூரு முறையே 3வது மற்றும் 4வது இடங்களிலும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.