உத்திரப்பிரதேச மாநிலத்தின் முதல் முதலீட்டாளர் மாநாட்டின்போது “நிவேஷ் மித்ரா” (Nivesh Mitra) எனும் டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் தளம் மூலம் முதலீட்டாளர்கள் ஆன்லைன் வழியே தங்களுடைய திட்டங்களுக்கான அனுமதிகளுக்கு (Project Clearance) விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம்.
இதனால் ஒப்பீட்டளவில் ஊழல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
நிவேஷ் மித்ரா திட்டத்தைத் தொடங்கியுள்ளதன் மூலம் எத்தகு மனித ஆட்படலும் இன்றி திட்டங்களுக்கு முழுவதும் டிஜிட்டல் முறையிலேயே அனுமதி வழங்கும் சேவையை ஏற்படுத்தியுள்ள முதல் இந்திய மாநிலமாக உத்திரப்பிரதேசம் உருவாகியுள்ளது.