TNPSC Thervupettagam

டிஜிட்டல் வங்கி அலகுகள்

April 26 , 2022 945 days 478 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, "டிஜிட்டல் வங்கி அலகுகளை நிறுவுதல்" குறித்த வழி காட்டுதல்களை வெளியிட்டது.
  • இது நமது நாட்டின் 75வது சுதந்திரத் தின அமுதப் பெருவிழா தினத்தை (ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்) நினைவு கூரும் வகையில் அறிவிக்கப்பட்டது.
  • இந்த வழிகாட்டுதல்கள் உள்நாட்டில் பட்டியலிடப்பட்ட அனைத்து வணிக வங்கிகளுக்கும் (பிராந்திய கிராமப்புற வங்கிகள், பணவழங்கீட்டு வங்கிகள் மற்றும் உள்ளூர் வங்கிகள் தவிர்த்து) பொருந்தும்.
  • இந்த டிஜிட்டல் வங்கி அலகுகள், டிஜிட்டல் வங்கித் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான குறிப்பிட்ட குறைந்தபட்ச டிஜிட்டல் உள்கட்டமைப்பைக் கொண்ட நிலையான சிறப்பு வணிக அலகு/ மையமாக திகழும்.
  • இது தற்போதுள்ள நிதித் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கும் டிஜிட்டல் முறையில் தனது சேவையை விரிவுபடுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்