TNPSC Thervupettagam

டிஜிட்டல் விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவு

November 1 , 2017 2613 days 954 0
  • டிஜிட்டல் விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை பயன்படுத்தவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் கர்நாடகா அரசு கையெழுத்திட்டது.
  • மேகக் கணிமை, செயற்கை நுண்ணறிவு நுட்பம் (AI) மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வு போன்ற தொழிற் நுட்பம் சார்ந்த தீர்வை சேவைகளை அளித்து விவசாயிகளை  மேம்படுத்துவதற்காக   மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் கர்நாடக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மித வெப்ப மண்டல பகுதியின் வறள் நிலப் பயிர்களுக்கான  சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்துடன் (International Crops Research Institute for the Semi-Arid Tropics-ICRISAT)) இணைந்து பூச்செத்தனா திட்டத்தின் (Bhoochetana) கீழ் வரம்புடைய  சோதனைத் திட்டமாக கோடைப் பயிர் பருவத்திற்கான (Kharif Season)  பயிர்விதைப்பு ஆலோசனை சேவையை தொடங்கியுள்ளது.
பூச்செத்தனா திட்டம்  ( Project Bhoochetana)
  • இது தேர்ந்தெடுக்கப்பட்ட மானாவாரிப் பயிர்களின் (rainfed rops) சராசரி உற்பத்தித் திறனை 20% சதவீதமாக அதிகரிப்பதற்கான பணி நோக்கம் கொண்ட புதிய மாதிரி திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்