டிஜிட்டல் விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை பயன்படுத்தவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் கர்நாடகா அரசு கையெழுத்திட்டது.
மேகக் கணிமை, செயற்கை நுண்ணறிவு நுட்பம் (AI) மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வு போன்ற தொழிற் நுட்பம் சார்ந்த தீர்வை சேவைகளை அளித்து விவசாயிகளை மேம்படுத்துவதற்காக மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் கர்நாடக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மித வெப்ப மண்டல பகுதியின் வறள் நிலப் பயிர்களுக்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்துடன் (International Crops Research Institute for the Semi-Arid Tropics-ICRISAT)) இணைந்து பூச்செத்தனா திட்டத்தின் (Bhoochetana) கீழ் வரம்புடைய சோதனைத் திட்டமாக கோடைப் பயிர் பருவத்திற்கான (Kharif Season) பயிர்விதைப்பு ஆலோசனை சேவையை தொடங்கியுள்ளது.
பூச்செத்தனாதிட்டம் ( Project Bhoochetana)
இது தேர்ந்தெடுக்கப்பட்ட மானாவாரிப் பயிர்களின் (rainfed rops) சராசரி உற்பத்தித் திறனை 20% சதவீதமாக அதிகரிப்பதற்கான பணி நோக்கம் கொண்ட புதிய மாதிரி திட்டமாகும்.