உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகமானது ஆளில்லா விமானத்தை இயக்குபவருக்கான பதிவுகளைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
இது ‘டிஜிட்டல் ஸ்கை’ என்றழைக்கப்படும் தளம் மூலமாக செய்யப்படும்.
டிஜிட்டல் அனுமதியின்றி எந்த ஒரு ஆளில்லா விமானத்தையும் பறப்பதைத் தடுக்கும் விதமாக முதன்முறையாக 'No Permission, No Take-off (NPNT) முறை இதில் செயல்படுத்தப்படுகிறது.
நானோ அளவிலான ஆளில்லா விமானங்கள் எவ்வித தடையுமின்றி பறக்கலாம்.
மைக்ரோ மற்றும் அதற்கு மேற்பட்ட பிரிவுகளை இயக்க அதனை இயக்குபவர்கள் மற்றும் விமானிகள் ஆகிய அனைவரும் டிஜிட்டல் ஸ்கை தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
ஆளில்லா விமான இயக்குபவர் உரிமம் (UAOP - Unmanned Aerial Operator’s Permit) மற்றும் பிரத்யேக அடையாள எண் (UIN - Unique Identification Numbers) ஆகியவற்றிற்கான கட்டணங்கள் ‘பாரத் கோஷ் தளம்’ வழியாக ஏற்றுக் கொள்ளப்படும்.
‘பச்சை மண்டலங்கள்’ என்றழைக்கப்படும் பகுதிகளில் பறப்பதற்கு விமானத்தின் நேரம் மற்றும் இடம் ஆகியவற்றின் தகவல்களை தளம் அல்லது செயலி வழியாக அறிவித்தால் மட்டும் போதுமானது.
மஞ்சள் மண்டலங்கள் என்றழைக்கப்படும் பகுதிகளில் விமானங்கள் பறப்பதற்கு அனுமதி தேவை மற்றும் சிவப்பு மண்டலங்களில் பறப்பதற்கு விமானங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.