TNPSC Thervupettagam

டிடிமோகார்பஸ் ஜானகியே

July 5 , 2024 142 days 206 0
  • அருணாச்சலப் பிரதேசத்தில் டிடிமோகார்பஸ் ஜானகியே என்ற புதிய தாவர இனம் கண்டறியப் பட்டுள்ளது.
  • இது ஆப்பிரிக்க ஊதா நிறத் தாவரக் குடும்பத்தின் (ஜெஸ்நெரியாசியே) அங்கமான கல் பாசி என பொதுவாக அறியப்படும் டிடிமோகார்பஸ் என்ற தாவர வகையைச் சேர்ந்தது.
  • இந்தப் பேரினமானது, 111 இனங்களைக் கொண்டுள்ளது என்ற நிலையில் அவற்றில் தற்போது புதிதாக விவரிக்கப்பட்டுள்ள இந்த இனம் உட்பட 27 இனங்கள் இந்தியாவில் காணப் படுகின்றன.
  • இதற்கு இந்தியத் தாவரவியல் முன்னோடியான டாக்டர் E.K.ஜானகி அம்மாள் அவர்கள் நினைவாக பெயரிடப்பட்டது.
  • இவர் 1931 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் (மிச்சிகன் பல்கலைக்கழகம்) தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்