அருணாச்சலப் பிரதேசத்தில் டிடிமோகார்பஸ் ஜானகியே என்ற புதிய தாவர இனம் கண்டறியப் பட்டுள்ளது.
இது ஆப்பிரிக்க ஊதா நிறத் தாவரக் குடும்பத்தின் (ஜெஸ்நெரியாசியே) அங்கமான கல் பாசி என பொதுவாக அறியப்படும் டிடிமோகார்பஸ் என்ற தாவர வகையைச் சேர்ந்தது.
இந்தப் பேரினமானது, 111 இனங்களைக் கொண்டுள்ளது என்ற நிலையில் அவற்றில் தற்போது புதிதாக விவரிக்கப்பட்டுள்ள இந்த இனம் உட்பட 27 இனங்கள் இந்தியாவில் காணப் படுகின்றன.
இதற்கு இந்தியத் தாவரவியல் முன்னோடியான டாக்டர் E.K.ஜானகி அம்மாள் அவர்கள் நினைவாக பெயரிடப்பட்டது.
இவர் 1931 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் (மிச்சிகன் பல்கலைக்கழகம்) தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி ஆவார்.