ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கான ஒருங்கிணைந்த பிராந்திய பல்வகை - அபாய முன்னெச்சரிக்கை அமைப்பானது (RIMES - Regional Integrated Multi-Hazard Early Warning System) டிட்லி புயலை அரிதினும் அரிதான புயல் என வரையறை செய்துள்ளது.
புயல் காற்றுகள் பொதுவாக நிலப்பரப்பினை அடைந்தவுடன் தனது வலிமையை இழந்து விடும். ஆனால் டிட்லியின் பாதையானது கடந்த 200 வருட புயல்களின் பதிவுகளில் இதற்கு முன் இல்லாதவாறு அமைந்தது.
இதுவரை கடந்த 200 வருட வரலாற்றுப் பதிவுகளில் கீழ்க்காணும் 2 புயல்கள் மட்டுமே நிலச்சரிவை ஏற்படுத்திய பின்னர் அவை ஒடிசாவின் கடற்பகுதியில் வலுப் பெற்றுள்ளன.
1994-ல் சூப்பர் புயல்
டிட்லி
அக்டோபர் 11 அன்று டிட்லி புயலானது ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் நிலச்சரிவை ஏற்படுத்திய பின்னர் ஒடிசாவின் கஜபதி மாவட்டத்தில் நுழைந்தது.
அதற்குப் பின்னர், அதற்கு அருகிலுள்ள மாவட்டங்களை நோக்கி திடீர் திரும்புதலை ஏற்படுத்தியதுடன் 48 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான புயல் காற்றாகவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவும் அது தொடர்ந்தது.