TNPSC Thervupettagam

டியாங்காங் விண்வெளி நிலையம்

November 6 , 2022 624 days 337 0
  • தியாங்காங் விண்வெளி நிலையத்தின் இறுதி விண்வெளிப் பெட்டகமான “மெங்டியன்” வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
  • இது டியாங்காங் விண்வெளி நிலையத்திலுருந்தது விண்ணில் ஏவப்படும் மூன்றாவது மற்றும் இறுதி விண்வெளிப் பயண பெட்டகமாகும்.
  • இந்தப் பெட்டகமானது 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் செயல்படும் என எதிர் பார்க்கப் படுகிறது.
  • "மெங்டியன்" என்ற பெயருக்கு "சொர்க்கக் கனவு" என்று பொருளாகும்.
  • இந்தப் பெட்டகமானது, தியான்ஹே மையத் தொகுதியுடன் ஒருமுறை இணைக்கப் பட்டால், மற்ற பெட்டகமான வென்ஷியன் உடன் இணைந்து விண்வெளி நிலையத்தின் T- வடிவ அமைப்பை இது நிறைவு செய்யும்.
  • வென்ஷியன் பெட்டகமானது 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் விண்ணில் ஏவப்பட்டது.
  • தியாங்காங் விண்வெளி நிலையம் தற்போது சீனா அரசினால் கட்டமைக்கப்பட்டு, சீனாவின் மனிதர்களை ஏந்திச் செல்லும் விண்வெளி முகமையினால் இயக்கப் படுகிறது.
  • இது புவியின் மேற்பரப்பிலிருந்து 340 முதல் 450 கிமீ வரையிலான தொலைவில் புவி தாழ்மட்டச் சுற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.
  • இந்த விண்வெளி நிலையத்தின் நிறையானது சர்வதேச விண்வெளி நிலையத்தின் நிறையின் ஐந்தில் ஒரு பங்காகும்.
  • அதன் அளவு கிட்டத்தட்ட செயல்பாடுகள் நிறுத்தப்பட்ட ரஷ்யாவின் மிர் விண்வெளி நிலையத்திற்குச் சமமானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்