சீனாவானது தியான்ஹே முதன்மைப் பெட்டக வானறை (Tianhe Core Module Cabin) எனப்படும் தனது சொந்த விண்வெளி நிலையத்தின் முதல் பகுதியினை (பாகத்தினை) முன்பே நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தி உள்ளது.
இது வென்சாங்க் என்ற விண்வெளித் தளத்திலிருந்து லாங்க் மார்ச் – 5BY2 என்ற ஏவுகலன் (ராக்கெட்) மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த தியான்ஹே முதன்மைப் பெட்டக வானறை விண்வெளி வீரர்களுக்குத் தேவையான வாழ்வாதாரக் கருவிகள் மற்றும் வாழிடத்தைக் கொண்டிருக்கும்.
தியான்காங் விண்வெளி நிலையம் என்றால் “சொர்க்க லோக அரண்மனை” (Heavenly Palace) என்று பொருளாகும்.