TNPSC Thervupettagam

டிரம்ப் மீதான பதவி நீக்கச் செயல்முறை

January 20 , 2021 1334 days 507 0
  • டொனால்ட் டிரம்ப் இரண்டு முறை பதவி நீக்கச் செயல்முறை நிறைவேற்றப்பட்ட  முதல் அமெரிக்க அதிபராவார்.
  • அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையால் 232 - 197 வாக்குகள் என்ற விகிதத்தில் அவர் மீது பதவி நீக்கச் செயல்முறை நிறைவேற்றப்பட்டது .
  • அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் போதுமான வாக்குகளைப் பெற்ற பிறகு, இந்தத் தீர்மானமானது அடுத்து அமெரிக்க செனட்டிற்குச் செல்லும்.
  • அமெரிக்காவின் மேல் சபையான செனட் ஒரு விசாரணையை அமைக்கும்.
  • இருப்பினும், ஜனவரி 20 ஆம் தேதிக்கு முன்பு அதை அந்த சபை நடத்த வாய்ப்பில்லை.
  • ஜனவரி 20 ஆம் தேதி, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்கிறார்.
  • இதன் பொருள் டொனால்ட் டிரம்ப் பதவியில் இருந்து நீக்கப்படும் அபாயத்திலிருந்து தப்பிப்பார்.
  • மூன்று அமெரிக்க அதிபர்கள் மீது காங்கிரஸால் பதவி நீக்கச் செயல்முறை நிறைவேற்றப் பட்டுள்ளது – அவர்கள் டொனால்ட் டிரம்ப், ஆண்ட்ரூ ஜான்சன் மற்றும் பில் கிளிண்டன்.
  • அவர்களில், டிரம்ப் மட்டுமே ஒரே பதவிக் காலத்தில் இரண்டு முறை குற்றஞ்சாட்டப் பட்டுள்ளார்.
  • இருப்பினும், எந்தவொரு அமெரிக்க ஜனாதிபதியும் இதன் மூலம் பதவியில் இருந்து நீக்கப் படவில்லை.

பதவி நீக்கம் செயல்படுத்தப்படும் முறை

  • முதலாவதாக, அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை ஜனாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு வாக்களிக்க வேண்டும்.
  • சாதாரண பெரும்பான்மையுடன் வாக்குகள் நிறைவேற்றப்பட்ட பின்னர், அந்நாட்டின் அதிபர் பதவி நீக்கம் செய்யப்படுவார்.
  • இருப்பினும், அதிபர் பதவியில் இருந்து அவர்கள் நீக்கப்படுவதில்லை.
  • அடுத்த கட்டத்தில், மேல் சபை, அதாவது அமெரிக்க செனட் ஆனது நீதிமன்றம் போல கூட்டப் படுகிறது.
  • செனட்டில் மூன்றில் இரண்டு பங்கு நபர்கள் வாக்களித்தால் தான் அதிபர் பதவியில் இருந்து நீக்கப் படுவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்