மதுரையிலுள்ள கோரிப்பாளையம் அருகே திருநங்கைச் சமுதாயத்தினரால் நடத்தப் படும் டிரான்ஸ் கிச்சன் என்ற உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
இது அந்த நகரில் இந்த வகையிலான முதல் முன்னெடுப்பாகும்.
ஸ்வஸ்தி என்ற அமைப்பானது ஆரோக்கியம், விருத்தி மற்றும் ஸ்ரீலஷ்மி பெண்கள் முன்னேற்றச் சங்கம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இந்த முன்னெடுப்பிற்கு நிதி வழங்கியுள்ளது.