அரசாங்க மருத்துவமனையில் டிரான்ஸ்கேத்தெடர் பெருந்தமனித் தடுப்பிதழ் உட்பொருத்துதலை (TAVI - Transcatheter Aortic Valve Implantation) அறிமுகப்படுத்திய நாட்டின் முதலாவது மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
TAVI ஆனது 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சென்னையில் ஓமந்தூரார் எஸ்டேட்டில் உள்ள தமிழக அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தொடங்கப்பட்டது.
திறந்த இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத முதிய இதய நோயாளிகளின் மீது TAVI சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இது துளையிட்டு பற்றவைப்பு முறையின் மூலம் அடைப்பிதழை மாற்றுவதில் பங்கு கொள்கிறது.
இரண்டு நோயாளிகளுக்கு இலவசமாக இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக ஹார்ட் டீம் இந்தியாவுடன் தமிழக அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.