டிரிஸ்டன் அல்பாட்ராஸ் எதிர்கொள்ளும் எலிகள் பிரச்சினை
November 1 , 2019 1854 days 655 0
கௌக் தீவில் உள்ள அரிய வகை கடற் பறவையான டிரிஸ்டன் அல்பாட்ராஸ் குஞ்சுகளை மிகப்பெரிய எலிகள் கொன்று சாப்பிட்டுள்ளன.
கௌக் தீவானது தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு உலகப் பாரம்பரியத் தளமாகும்.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள பறவைகள் பாதுகாப்பிற்கான ராயல் சமூகமானது இந்த எலிகளைக் கொல்ல தானியங்களை அடிப்படையாகக் கொண்ட விஷத் துகள்களுடன் ஹெலிகாப்டர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
அழிவு நிலையில் உள்ள இந்தக் குஞ்சுகளானவை, பெரும்பாலும் உணவைக் தேட இதன் பெற்றோர்கள் கூட்டை விட்டு வெளியில் செல்லும்போது. கொறித்துண்ணிகளால் கொல்லப்படுகின்றன.
“மிகவும் அரிய இனங்கள்” என்ற பிரிவில் உள்ள இந்த டிரிஸ்டன் அல்பாட்ராஸ் பறவைகளின் 2,000 ஜோடிகள் மட்டுமே இப்போது இத்தீவில் உள்ளன.