இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI - Reserve bank of India) தனது பத்திர மாற்றுத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் டிவிஸ்ட் நடவடிக்கையாக என்றறியப்படும் இது நிதி மாற்றம் செய்தலுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
10,000 கோடி ரூபாய்க்காக திறந்தவெளிச் சந்தை நடவடிக்கைகளின் கீழ் (OMO - open market operations) அரசாங்கப் பத்திரங்களின் வாங்குதல் மற்றும் விற்றல் நடவடிக்கைகளை இதன்மூலம் மேற்கொள்ள இருப்பதாக RBI கூறியுள்ளது.
“டிவிஸ்ட் நடவடிக்கை” என்பது OMOவின் மூலம் ஒரே நேரத்தில் RBIயின் குறுகிய காலப் பத்திரங்களை விற்றல் மற்றும் நீண்டகாலப் பத்திரங்களை வாங்குதல் தொடர்பான ஒரு நடவடிக்கையாகும்.
இந்த நடைமுறையின் கீழ், குறுகிய காலப் பத்திரங்கள் நீண்ட காலப் பத்திரங்களாக மாற்றமடைகின்றன.
RBI ஆனது OMO என்று அழைக்கப்படும் நிதியியல் கூறின்படி, அரசாங்கப் பத்திரங்களின் வாங்குதல் மற்றும் விற்றல் நடவடிக்கைகளின் மூலம் பணப் புழக்கம், ரூபாயின் மதிப்பு மற்றும் நிதியியல் மேலாண்மையைக் கட்டுப்படுத்தி, அவற்றை நிர்வகிக்கின்றது.