டி20 கிரிக்கெட் போட்டிகளில் 300 ஆட்டமிழப்புகளை (கேட்சுகள் மற்றும் ஸ்டம்பிங்) செய்த முதல் இந்திய மற்றும் இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்ற ஒரு பெருமையை மகேந்திர சிங் தோனி பெற்றுள்ளார்.
தோனி 214 கேட்சுகள் மற்றும் 89 ஸ்டம்பிங் உட்பட மொத்தம் 301 ஆட்டமிழப்புகளைச் செய்துள்ளார்.
கீரன் பொல்லார்டு டி20 கிரிக்கெட் போட்டிகளில் 345 கேட்சுகளை எடுத்துள்ளார்.
தினேஷ் கார்த்திக் 207 கேட்சுகள் மற்றும் 69 ஸ்டம்பிங் உட்பட மொத்தம் 276 ஆட்டமிழப்புகளைச் செய்துள்ளார்.
இந்தப் போட்டியின் போது 250 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமையையும் தோனி பெற்றார்.