டி20 போட்டிகளின் வரலாற்றில் 400 போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியர் என்றப் பெருமையை ரோஹித் சர்மா பெற்றார்.
அவரைத் தொடர்ந்து 368 டி20 போட்டிகளில் விளையாடியப் பெருமையினை தினேஷ் கார்த்திக் பெற்றுள்ளார்.
தோனி 361 போட்டிகளில் விளையாடியதன் மூலம் 3வது இடத்தில் உள்ளார்.
விராட் கோலி தனது 354வது டி20 போட்டியில் பங்கேற்று வருகிறார்.
614 போட்டிகளில் பங்கேற்றதன் மூலம் கீரன் பொல்லார்ட் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இவரைத் தொடர்ந்து ட்வைன் பிராவோ (556), ஷோயப் மாலிக் (481), கிறிஸ் கெய்ல் (463), சுனில் நரைன் (435), ரவி போபாரா (429), ஆண்ட்ரே ரசல் (428), டேவிட் மில்லர் (403) ஆகியோர் ரோஹித்துக்கு முன்னதாக இடம் பெற்றுள்ளனர்.