நாட்டின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகியானது டீசல் வாகனத் தயாரிப்பை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 அன்று நடைமுறைக்கு வரவிருக்கும் புதிய பாரத் – VI உமிழ்வு விதிமுறைகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாரத் நிலை உமிழ்வுத் தரங்களானது இந்திய அரசால் உருவாக்கப்பட்ட உமிழ்வுத் தரங்களாகும்.
இந்தியாவில் உமிழ்வு விதிமுறைகளின் வரலாறு பின்வருமாறு.
பாரத் நிலை VI
தற்பொழுதுள்ள பாரத் நிலை IV (BS-IV) மற்றும் BS-VI எரிசக்தி விதிமுறைகள் ஆகியவற்றின் தரங்களிடையே காணப்படும் முக்கிய வேறுபாடானது அவற்றில் உள்ள சல்பராகும்.
BS-VI எரிபொருளானது 80 சதவிகித அளவிற்கு, தற்பொழுதுள்ள 50 ppm நிலையிலிருந்து 10 ppm என்ற நிலைக்கு, சல்பரைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
நைட்ரஜன் ஆக்ஸைடுகளின் உமிழ்வானது டீசல் மகிழுந்துகளில் 70 சதவிகிதம் என்ற அளவிற்கும் பெட்ரோல் மகிழுந்துகளில் 25 சதவிகிதம் என்ற அளவிற்கும் குறையும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.