TNPSC Thervupettagam

டீப் மைண்ட் நிறுவனத்தின் ஆல்பாமிசென்ஸ் நிரல்

November 6 , 2023 257 days 205 0
  • கூகுள் டீப் மைண்ட் நிறுவனத்தின் அறிவியலாளர்கள் ஆல்பாமிசென்ஸ் என்ற செயற்கை நுண்ணறிவு நிரலை உருவாக்கியுள்ளனர்.
  • இதன் மூலம் மரபணு மாற்றங்களால் ஏற்படும் சாத்தியமான தீங்கு விளைவிக்கும் அல்லது தீங்கு விளைவிக்காத தன்மையைக் குறிப்பாக DNA குறியீட்டில் ஒற்றை எழுத்து மாற்றங்களை உள்ளடக்கிய தவறான பிறழ்வுகளை கணிக்க முடியும்.
  • இந்தப் பிறழ்வுகள் நீர்மத் திசுவழற்சி, புற்றுநோய், மற்றும் மூளை வளர்ச்சி குறைபாடுகள் போன்ற கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.
  • ஆல்பாமிசென்ஸ் நிரல், மனிதப் புரதங்களில் உள்ள 71 மில்லியன் ஒற்றை எழுத்துப் பிறழ்வுகளை மதிப்பிட்டுள்ளது.
  • இது 90% துல்லிய வீதத்தினை அடைந்தது, 57% பாதிப்பில்லாதது என்றும் 32% தீங்கானது என்றும் வகைப்படுத்தி, சில நிச்சயமற்ற தன்மையை உறுதிப்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்