TNPSC Thervupettagam

டுக்கும் துறைமுகம் – இந்தியாவிற்கு அனுமதி

February 15 , 2018 2477 days 831 0
  • இரு நாடுகளுக்கிடையேயான இராணுவ ஒத்துழைப்பு மீதான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிற்சேர்க்கை ஒன்றில் (annexure) இந்தியாவும் ஓமனும் கையெழுத்திட்டுள்ளன.
  • இராணுவ பயன்பாடு மற்றும் பண்டகப் போக்குவரத்திற்கு உதவுவதற்காக ஓமனின் முக்கிய துறைமுகமான டுக்கும் (Duqm port) துறைமுகத்தின் அணுகலை இந்தியா இதன் மூலம் உறுதி செய்து கொண்டுள்ளது.
  • இது இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் தன் நிலைப்பாட்டை (அல்லது) சுவட்டை (Footprint) விரிவுபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தியாவின்  பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய நகர்வாகும்.
  • இது இந்தியப் பெருங்கடல் பகுதியில் அதிகரித்து வரும் சீனாவின் செயல்பாடுகள் மற்றும் செல்வாக்கை எதிர்ப்பதற்கான இந்தியாவின் கடல்சார் உத்திகளின் (Maritime Strategy) ஒரு பகுதியாகும்.
  • டுக்கும் துறைமுகமானது ஈரானின் சாபஹார் மற்றும் பாகிஸ்தானின் குவாதார் துறைமுகத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது.
  • பாகிஸ்தானின் குவாதார் துறைமுகமானது சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் (China Pakistan Economic Corridor) ஒரு பகுதியாக பாகிஸ்தானில் சீனாவால் கட்டமைக்கப்பட்டு வருகின்றது.
  • செசெல்ஸ் நாட்டில் இந்தியாவினால் மேம்படுத்தப்பட்டு வரும் அஸம்சன் தீவு (Assumption Island) மற்றும் மொரிஸியஸ் நாட்டின் அகாலேகா தீவுடன் (Agalega Island) இணைந்து டுக்கும் துறைமுகமும் இந்தியாவின் செயல்திறன் வாய்ந்த கடல்சார் பாதுகாப்பு வழித்தடத்தில் (proactive maritime security roadmap) அமைந்துள்ளது.
  • மேலும் இத்துறைமுகமானது சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்றையும் கொண்டுள்ளது. இதில் இந்திய நிறுவனங்களினால் 1.8 மில்லியன் டாலர் அளவிற்கு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்