TNPSC Thervupettagam

டுர்ரிடோப்சிஸ் டோர்னி

November 16 , 2024 6 days 79 0
  • டுர்ரிடோப்சிஸ் டோர்னி "அழியாத ஜெல்லிமீன்" என்றும் அழைக்கப்படுகிறது.
  • அவை தனது வயது முதிர்வுச் செயல்முறையை நன்கு மாற்றியமைத்து மரணத்தைத் தவிர்க்கும் ஒரு குறிப்பிடத் தக்கத் திறனைக் கொண்டுள்ளன.
  • சுற்றுச்சூழல் சார்ந்த அழுத்தம் அல்லது உடல் சேதத்தை எதிர்கொள்ளும் போது, ​​இந்த ஜெல்லிமீன் அதன் வாழ்க்கைச் சுழற்சியின் முந்தைய நிலைக்குத் திரும்பும்.
  • இது அதன் முதிர்ந்தச் செல்களை மீண்டும் பாலிப் (தொடக்க) நிலைக்கு மாற்றுகிறது (இளமை வடிவம்).
  • ஜெல்லி மீன்கள் அதன் வாழ்க்கைச் சுழற்சியை மீண்டும் தொடங்க வழிவகுக்கின்ற இந்த உருமாற்றச் செயல்முறை ஆனது "செல் வகை மாற்றம்" என்றும் அழைக்கப் படுகிறது.
  • இந்த உயிரினம் ஆனது முதன்முதலில் 1883 ஆம் ஆண்டில் அறிவியல் ஆய்வாளர்களால் விவரிக்கப் பட்டது.
  • முதலில் மத்தியத் தரைக் கடல் பகுதிகளில் கண்டுபிடிக்கப் பட்ட இந்த ஒரு உயிரினம் ஆனது, உலகெங்கிலும் உள்ள பெருங்கடல்களில் காணப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்