TNPSC Thervupettagam

டூட்டி சந்த் – தங்கப் பதக்கம்

July 11 , 2019 1838 days 691 0
  • உலகளாவியப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை தடகள வீரரான டூட்டி சந்த் பெற்றுள்ளார்.
  • இவர் இத்தாலியின் நபோலியில் நடைபெற்ற உலக யுனிவர்சியேட் போட்டித் தொடரில் முதலிடத்தைப் பிடித்தார்.
  • இவர் 11.32 வினாடிகளில் முடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
  • இவரின் தேசிய சாதனையானது 11.24 வினாடிகளாகும்.
  • டூட்டி சந்த் ஒடிசாவைச் சேர்ந்தவராவார்.
  • ஹீமா தாஸிற்குப் பிறகு உலகளாவியப் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய தடகள வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
  • 2018 ஆம் ஆண்டில் உலக இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 400 மீ பந்தயத்தில் ஹீமா தாஸ் தங்கம் வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்