TNPSC Thervupettagam
March 29 , 2019 1950 days 562 0

  • கணினி செயல்பாட்டிற்கான நோபல் பரிசு என்றறியப்படும் 2018 ஆம் ஆண்டிற்கான டூரிங் விருதானது 3 ஆராய்ச்சியாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • யோஷீவா பெங்கியோ, ஜியோப்ரே ஹிண்டன் மற்றும் யான் லிகன் ஆகிய மூவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
  • செயற்கை நுண்ணறிவின் கடவுளர்கள் என்றறியப்படும் இந்த ஆராய்ச்சியாளர்களே தற்போதைய செயற்கை நுண்ணறிவுத் துறையின் உச்சத்திற்கு அடித்தளம் அமைத்தவர்களாவர்.
  • 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் இவர்கள் உருவாக்கிய தொழில்நுட்பமே மிகப்பெரிய அளவில் கணினியின் பார்வை மற்றும் குரல் அங்கீகாரம் ஆகிய பணிகளில் முன்னேற்றத்தை அளித்துள்ளன.
  • செல்லிடப் பேசிகளில் முக அங்கீகாரம், தானியங்கு மருத்துவ பரிசோதனை, ஒட்டுநரில்லா கார்கள் ஆகியவை இவர்களின் கண்டுபிடிப்பால் நிகழ்ந்த சில முக்கிய விளைவுகளாகும்.

ஆலன் மேத்தசன் டூரிங் விருது

  • இந்த விருதானது பிரிட்டனைச் சேர்ந்த கணிதவியலாளர் மற்றும் கணிப்பொறி அறிவியலாளரான ஆலன் மேத்தசன் டூரிங் பெயரில் வழங்கப்படுகிறது.
  • இவரின் குறீயீடு உடைத்தல் பணியானது இரண்டாம் உலகப்போரின் போது மிக முக்கிய பங்காற்றியது.
  • இந்த டூரிங் விருதானது முதன்முதலில் 1966 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்