கோவிட் – 19 நோய்த் தொற்றிலிருந்து உயிர் காப்பு விகித அதிகரிப்பைக் காட்டியுள்ள முதலாவது மருந்து இதுவாகும்.
இது வீக்கத்தைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு ஊக்க மருந்தாகும்.
இது கீழ்வாதம், இரத்தம்/ஹார்மோன்/நோய் எதிர்ப்பு அமைப்புப் பிரச்சினைகள், ஒவ்வாமை, பல்வேறு தோல் மற்றும் கண் தொடர்பான பிரச்சினைகள், சுவாசக் கோளாறுகள், குடல் பிரச்சினைகள் மற்றும் சில புற்றுநோய்கள் ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப் படுகின்றது.
இது அட்ரீனல் சுரப்பிப் பிரச்சினைக்கான (கூடுதல் சிறுநீரக இயக்குநீர் சுரப்பி நோய்) சோதனையாகவும் பயன்படுத்தப் படுகின்றது.
இந்த ஆய்வுக் கண்காணிப்பானது இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட “RECOVERY” (கோவிட் – 19 நோய்த் தொற்றுச் சிகிச்சை முறையின் சீரற்ற மதிப்பீடு - Randomised Evaluation of COVid-19 therapy) என்ற ஒரு மருத்துவச் சோதனையின் அடிப்படையில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இந்த மருந்தானது அகமதாபாத்தில் உள்ள சைடஸ் கேடிலா அல்லது கேடிலா சுகாதார நல நிறுவனம் என்ற ஒரு நிறுவனத்தினால் இந்தியாவில் தயாரிக்கப் படுகின்றது.