அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகமானது டெங்கு காய்ச்சலுக்கான முதல் தடுப்பூசியான ‘டெங்க்வாக்ஸியா’விற்கு (Dengvaxia) ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனால் நோய்த் தொற்றினை ஏற்கனவேப் பெற்றிருக்கும் மக்களுக்கு மட்டுமே இந்த டெங்கு தடுப்பூசியினைப் பயன்படுத்த வேண்டும் என்ற சில நிபந்தனைகளையும் முன்வைத்துள்ளது.
உயிருள்ள வீரியம் குறைந்த டெங்கு வைரஸைக் கொண்ட இந்தத் தடுப்பூசியானது மூன்று தவணைகளில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும்.
CYD-TDU என்றறியப்படும் இந்தத் தடுப்பூசியானது சோனாஃபி பாஸ்டீயூர் எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.
2015 ஆம் ஆண்டிலேயே முதன்முதலில் இதற்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு மெக்ஸிகோ ஆகும்.