TNPSC Thervupettagam

டெனாலி பிளவுப் பெயர்ச்சிப் பகுதி

December 28 , 2024 25 days 65 0
  • டெனாலி பிளவுப் பெயர்ச்சிப் பகுதி என்பது மேற்கு வட அமெரிக்காவில் உள்ள ஒரு கிடைமட்டமான வலது புற பக்கவாட்டு நகர்வு கொண்ட பிளவுப் பெயர்ச்சிப் பகுதி ஆகும்.
  • கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து அமெரிக்காவின் மத்திய அலாஸ்கா பகுதி வரை இது நீண்டுள்ளது.
  • இது பசிபிக் தட்டுக்கும் வட அமெரிக்கக் தட்டுக்கும் இடையே உள்ள எல்லையைக் குறிக்கிறது என்ற நிலையில் பசிபிக் தட்டு ஆனது வட அமெரிக்கத் தட்டின் கீழே அமிழ்ந்து வருகிறது.
  • இந்த கீழ் அமிழ்தல் நிகழ்வானது, மிக குறிப்பிடத்தக்க புவியியல் அழுத்தம் மற்றும் சிதைவை ஏற்படுத்துகிறது.
  • டெனாலி பிளவுப் பகுதியில் உள்ள இந்த மூன்று புவியியல் தளங்களும், ஒரு காலத்தில் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு நிலப்பகுதிகளை மிக நன்கு ஒன்றிணைத்த ஓர் அம்சத்தின் ஒரு பகுதியாக இருந்தன.
  • கிளியர்வாட்டர் மலைகள், குளுவான் ஏரி மற்றும் கடற்கரை மலைகள் 300 மைல் தொலைவிலான கிடைமட்ட இயக்கத்தினால் இணைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்