டென்மார்க் நாட்டின் அரசி இரண்டாம் மார்கிரேத், 52 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
அவர் அரியணையை தனது மகனும் பட்டத்து இளவரசருமான ஃபிரடெரிக்கிடம் ஒப்படைக்க உள்ளார்.
அரசர் ஒன்பதாம் ஃபிரடெரிக் இறந்ததைத் தொடர்ந்து இராணி இரண்டாம் மார்கிரேத் 1972 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதியன்று அரியணை பொறுப்பை ஏற்றார்.
கடந்த ஆண்டு பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் அவர்களின் மரணத்திற்குப் பிறகு, ஐரோப்பாவில் நீண்ட காலம் பதவியில் இருந்த ஆட்சியாளராக மார்கிரேத் ஆனார்.
டென்மார்க் நாட்டின் அரச குடும்பத்தார் நாட்டின் அரசியலமைப்பின் கீழ், வரையறுக்கப் பட்ட பங்கையே கொண்டுள்ள நிலையில் நாட்டின் அதிகாரம் அதன் பாராளுமன்றத்திடம் உள்ளது.
அரசர்/அரசிகள் முக்கிய தூதரகப் பங்கினையும் புதிய சட்டத்தில் கையெழுத்திடுதல் போன்ற பங்கினையும் வகிக்கிறார்கள்.