TNPSC Thervupettagam

டென்மார்க் நாட்டின் அரசி இரண்டாம் மார்கிரேத்

January 7 , 2024 323 days 309 0
  • டென்மார்க் நாட்டின் அரசி இரண்டாம் மார்கிரேத், 52 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
  • அவர் அரியணையை தனது மகனும் பட்டத்து இளவரசருமான ஃபிரடெரிக்கிடம் ஒப்படைக்க உள்ளார்.
  • அரசர் ஒன்பதாம் ஃபிரடெரிக் இறந்ததைத் தொடர்ந்து இராணி இரண்டாம் மார்கிரேத் 1972 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதியன்று அரியணை பொறுப்பை ஏற்றார்.
  • கடந்த ஆண்டு பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் அவர்களின் மரணத்திற்குப் பிறகு, ஐரோப்பாவில் நீண்ட காலம் பதவியில் இருந்த ஆட்சியாளராக மார்கிரேத் ஆனார்.
  • டென்மார்க் நாட்டின் அரச குடும்பத்தார் நாட்டின் அரசியலமைப்பின் கீழ், வரையறுக்கப் பட்ட பங்கையே கொண்டுள்ள நிலையில் நாட்டின் அதிகாரம் அதன் பாராளுமன்றத்திடம் உள்ளது.
  • அரசர்/அரசிகள் முக்கிய தூதரகப் பங்கினையும் புதிய சட்டத்தில் கையெழுத்திடுதல் போன்ற பங்கினையும் வகிக்கிறார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்