அறிவியலாளர்கள் முன்னதாக அறியப்படாத, விலங்குகளை வேட்டையாடி உண்ணும் ஒரு புழு இனத்தின் புதைபடிவங்களை கண்டறிந்துள்ளனர்.
வடக்கு கிரீன்லாந்தின் முற்கால கேம்ப்ரியன் சிரியஸ் பாஸ்செட் புதைபடிவம் கண்டறியப் பட்ட பகுதியில் இந்தப் புதைபடிவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இலத்தீன் மொழியில் ‘பயங்கரமான விலங்கு' என்று பொருள்படுகின்ற டைமோரெ பெஸ்டியா என்று இதற்குப் பெயரிடப்பட்டது.
இந்தப் பெரிய உயிரினங்கள் 518 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் பகுதியில் வசித்த முற்கால மாமிச உண்ணி விலங்குகளில் சிலவற்றைக் குறிக்கிறது.
இந்த கண்டுபிடிப்பு ஆனது முன்னர் அறியப்படாத, வேட்டையாடி உண்ணும் இனங்கள் குறித்த தகவல்களை வழங்குகிறது.
துடுப்புகளுடன் கூடிய டெரர் பீஸ்ட்ஸ் (30 செ.மீ.), நீண்ட உணர் இழைகளுடன் கூடிய ஒரு தனித்துவமான தலையையும், அதன் வாயினுள் மிகவும் வலிமையான தாடை அமைப்புகளையும் கொண்டிருந்தது.
மகத்தான நீச்சல் திறனுடன் கூடிய இந்த அம்சங்கள், சுமார் அரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு முற்கால கேம்ப்ரியன் சகாப்தத்தில் மிகப்பெரிய வேட்டையாடி இனங்களில் ஒன்றாக இவை திகழக் காரணமாயிருந்தன.