TNPSC Thervupettagam

டெர்பி வான் – வான் கண்ணுறு தொலைவிற்கு அப்பாலான ஏவுகணை

May 3 , 2018 2397 days 764 0
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக போர் விமானமான தேஜஸ், டெர்பி என்ற (வான் – வான்) கண்ணுறு தொலைவிற்கு அப்பாலான ஏவுகணையை கோவா கடற்பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • இந்த வெற்றிகரமான சோதனையானது, ஒரு திறனான ஒலியை விட வேகமாக செல்லும் போர் விமானம் எனும் வகையில் தேஜஸின் ஒட்டு மொத்த திறனையும் நிரூபித்துக் காட்டியுள்ளது.
  • தேஜஸ் ஆனது HAL (Hindustan Aeronautics Limited) மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO) வானூர்தி மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டது.
  • டெர்பி என்பது, சிறு முதல் நடுத்தர அளவிலான கண்ணுறு பகுதியைத் தாண்டிய வானிலிருந்து வானிலுள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை ஆகும். இது ஒரு இருபயன்பாட்டு (வானிலிருந்து வானிலுள்ள இலக்கைத் தாக்கும், தரையிலிருந்து வானிலுள்ள இலக்கை தாக்கும்) ஏவுகணையாகும்.
  • டெர்பி, இஸ்ரேலிய போர்த்தளவாட மேம்பாட்டு நிறுவனமான ரஃபேல் மற்றும் இஸ்ரேல் வானூர்தி தொழிற்சாலை MBT ஆகியவற்றின் கூட்டிணைவால் தயாரிக்கப்பட்டது.
  • கீழ்நோக்கிய பார்வை மற்றும் கீழ்நோக்கிய தாக்குதல் ஆகிய திறமைகளைக் கொண்டுள்ள டெர்பி, ஏவுதல் மற்றும் தன்னிச்சையாக செயல்படும் (Fire and Forget) நிலை மற்றும் மேம்படுத்தப்பட்ட மின்னணு எதிர் நடவடிக்கைகள் ஆகியவற்றை வாடிக்கையாளர்களின் செயல்பாட்டுத் தேவைகளுக்காக கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்