பருவநிலை மாற்ற நடவடிக்கைகளை ஏற்க மறுக்கும் அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப்பின் நினைவாக புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பார்வையற்ற ஈரிட வாழ்விக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய இராஜ்ஜியத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நீடித்த கட்டுமானப் பொருட்கள் நிறுவனமான என்விரோபில்டு, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஈரிட வாழ்விக்கு ‘டெர்மோபிஸ் டொனால்ட்டிரம்பி’ என்று பெயரிடப்படுவதாக அறிவித்துள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த ஈரிட வாழ்வியானது கால்களற்ற, பார்வையற்ற மற்றும் தரையில் தலையை புதைத்துக் கொள்ளும் தன்மை ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.