TNPSC Thervupettagam

டெல்லியின் கலால் வரிக் கொள்கை 2021-22

July 10 , 2021 1143 days 483 0
  • பொது மக்களுக்காக டெல்லியின் கலால் வரிக் கொள்கை 2021-22 சமீபத்தில் வெளியிடப் பட்டது.
  • டெல்லி அரசானது இந்தக் கொள்கையின் கீழ், தங்கும் விடுதிகள், கிளப் மற்றும் உணவகங்களில் உள்ள மதுபானக் கடைகளுக்கான புதிய விதிமுறைகளை வகுத்து உள்ளது.
  • கொள்கை ஆவணத்தின் படி, வெளிநாட்டவர்கள் அதிகம் வருகை தந்த 28 ஆவது நகரமாக டெல்லி உள்ளது.
  • இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது.
  • கலால் வரியானது அரசின் வருவாய்க்கான முதன்மை ஆதாரமாகும்.
  • டெல்லியில் வருவாயினை அதிகரிப்பதனை நோக்கமாகக் கொண்டு கலால் வரிக் கொள்கையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய வரிக்கொள்கையானது முன் வைக்கப்பட்டுள்ளது.
  • இது மதுபான கடத்தல் கும்பலையும் ஒழிக்கும்.
  • இப்புதிய கொள்கையின்படி, தங்கும் விடுதிகள், கிளப் மற்றும் உணவகங்களிலுள்ள மதுபானக் கடைகள் அதிகாலை 3 மணி வரை திறந்து இருக்கும்.
  • மதுபான வர்த்தகத்தின் சில்லறை விற்பனையில் அரசு பெருமளவில் ஈடுபடாது.
  • இதனால் டெல்லியில் அரசிற்குச் சொந்தமான மதுபானக் கடைகள் மூடப்பட்டு தனியார் துறையினருக்கு வாய்ப்புகள் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்