TNPSC Thervupettagam

டெல்லியின் மாநகராட்சிக் கழகத்தின் ஆல்டர்மேன் நியமனம்

August 19 , 2024 96 days 119 0
  • டெல்லியின் துணை நிலை ஆளுநருக்கு (L-G), டெல்லி அரசின் அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனை எதுவுமின்றி டெல்லி மாநகராட்சிக் கழகத்திற்கான (MCD) ‘இரண்டாம் நிலை நகராட்சித் தலைவர் - ஆல்டர்மேன்களை’ நியமிக்க அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • டெல்லி மாநகராட்சிக் கழக சட்டத்தின் (DMC) கீழ், டெல்லி 12 மண்டலங்களாக பிரிக்கப் பட்டுள்ளது.
  • இந்தச் சட்டமானது ஒவ்வொரு மண்டலத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதிகள் மற்றும் அந்த எல்லைக்குள் உள்ள இரண்டாம் நிலை நகராட்சித் தலைவர்களை உள் அடக்கிய ‘ஆட்சிப் பிரிவு குழுவினை’ உருவாக்குகிறது.
  • டெல்லியின் துணை நிலை ஆளுநருக்கு, இந்தச் சட்டத்தின் 3வது பிரிவின் கீழ், 25 வயதிற்கு மேற்பட்ட மற்றும் "மாநகராட்சி நிர்வாகத்தில் நல்லறிவு அல்லது அனுபவம் உள்ள" 10 இரண்டாம் நிலை நகராட்சித் தலைவர்களைப் பரிந்துரைக்க அதிகாரம் உள்ளது.
  • இரண்டாம் நிலை நகராட்சித் தலைவர்களுக்கு MCDயின் கூட்டங்களில் வாக்களிக்கும் உரிமை இல்லை.
  • 12 ஆட்சிப் பிரிவு குழுக்கள் ஒவ்வொன்றும் தங்கள் முதல் கூட்டத்தில் MCD நிலைக் குழுவின் ஓர் அங்கமாக விளங்கும் ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • இரண்டாம் நிலை நகராட்சித் தலைவர்கள் இந்தத் தேர்தல்களில் வாக்களிக்கலாம் மற்றும் நிலைக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வேட்பாளர்களாக நிற்கலாம்.
  • மேயர் MCD கழகத்தின் பெயரளவிலான தலைவராக உள்ள நிலையில், அதன் நிலைக் குழு ஆனது மாநகராட்சியின் செயல்பாடுகளை திறம்பட நிர்வகிக்கிறது.
  • இரண்டாம் நிலை நகராட்சித் தலைவர்கள் யாவரும் வாக்களிக்கும் செயல்முறையில் பங்கேற்காமல் இக்குழுவை அமைக்க முடியாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்