TNPSC Thervupettagam

டெல்லி பேச்சுவார்த்தை (Delhi Dialogue X - DD X)

July 22 , 2018 2193 days 632 0
  • மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜினால் தொகுத்து வழங்கப்பட்ட டெல்லி பேச்சுவார்த்தையின் 10வது பதிப்பு புதுதில்லியில் நடைபெற்றது.
  • இப்பதிப்பின் கருத்துரு, “இந்தியா - ஆசியான் கடல்வழிக் கூட்டுறவினை வலுப்படுத்துதல்”
  • DDX, வெளியுறவுத் துறை அமைச்சகத்தினால் (Ministry of External Affairs - MEA) வளரும் நாடுகளின் ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பு முறையுடன் (Research and Information System for Developing Countries - RIS) இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • புதுதில்லியில் ஜனவரி, 2018-ல் நடைபெற்ற ஆசியான் - இந்தியா நினைவு உச்சிமாநாட்டிற்குப் பிறகு ஏற்பாடு செய்யப்பட்ட முதல் சிறப்பான நிகழ்வு இதுவாகும்.
  • இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சபை (Association of Southeast Asian Nations - ASEAN) ஆகியவற்றிற்கிடையேயான அரசியல் பாதுகாப்பு, பொருளாதார மற்றும் சமூக-பண்பாட்டு தொடர்புகளை விவாதிப்பதற்கான முதன்மையான வருடாந்திர நிகழ்வு இந்த டெல்லி பேச்சுவார்த்தை ஆகும்.
  • 2009-லிருந்து இது வருடாந்திர நிகழ்வாக நடத்தப்பட்டு வருகிறது.
  • இப்பேச்சுவார்த்தையின் 9வது பதிப்பின் கருத்துரு, “ஆசியான் - இந்தியா உறவுகள் : அடுத்த 25 வருடங்களுக்கான கோர்வைகளைப் பட்டியலிடுதல்”
  • இது ஆசியான் - இந்தியா கூட்டுறவின் 25வது ஆண்டு நிறைவினைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்