TNPSC Thervupettagam

டெல்லி விமான நிலையம்

March 10 , 2018 2455 days 1032 0
  • அண்மையில், விமான நிலையங்களின் பன்னாட்டுக் குழுவால் வெளியிடப்பட்டுள்ள 2017ஆம் ஆண்டின் விமான நிலைய சேவைக்கானத் தர வரிசைப் பட்டியலில் (Airport Service Quality-ASQ), பயணிகளின் அனுபவத்தின் (Passengers Experience) அடிப்படையில் உலகின் சிறந்த விமான நிலையமாக டெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையம் (Indira Gandhi International  Airport) பட்டியலிடப்பட்டுள்ளது.
  • பயணிகளுடைய வருகை அதிகரிப்பின் அடிப்படையில் ஷாங்காய் விமானம் நிலையம் மற்றும் பாங்காக் விமான நிலையம் ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளி, 2017   ஆம் ஆண்டு  5 மில்லியன் பயணிகளை டெல்லி விமானம் நிலையம் கையாண்டுள்ளது.
  • உலகின் 20 முன்னணி பரபரப்பான விமான நிலையங்களுள் ஒன்றாகவும், ஆசியாவின் ஏழாவது பரபரப்பான விமான நிலையமாகவும் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் உள்ளது.
  • ASQ கணக்கெடுப்பானது விமான நிலையங்களின் தனிச் சிறப்புடைமையினை அளவிடும் உலகின் முக்கிய தர வரிசை அளவீடாகும்.
  • மேலும் இது விமான நிலையங்களில் பயணிகளின் விமான பயணத் தினத்தன்றே மேற்கொள்ளப்படும் உலகின் ஒரே  கணக்கெடுப்பு முறையாகும்.
  • இந்த கணக்கெடுப்பானது 34 முக்கிய செயல்பாட்டு அளவுருக்களின் மீது பயணிகளுடைய பார்வையை கணக்கிடுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்